நத்தம், ஜூலை 7: நத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுப்பகுதிகளில் போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். மணக்காட்டூர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் குடகிப்பட்டியைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் (35), அடைக்கனூரைச் சேர்ந்த வெள்ளத்துரை (47), முசுக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.