வந்தவாசி, ஜூன் 11: வந்தவாசி டவுன் யாதவர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(55)தனியார் கல்லூரி பஸ் டிரைவர். இவரது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணிக்காக பழைய வீட்டை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதற்காக பக்கவாட்டு பகுதியில் இருந்த நீளமான சன்சைட் சிலாப்பை இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் தொழிலாளி அருண்(28) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மேல் பகுதியில் அருண் ட்ரில்லிங் மெஷின் மூலமாக துளையிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பக்கவாட்டு சன்சைட் சுவர் கீழே ஒரு பகுதியில் சரிந்தது. அப்போது கீழ்ப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஏழுமலை தன் மீது விழாமல் இருக்க தப்பி ஓட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சைன்சைடு சிலாப்பின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டார். ட்ரில்லிங் மிஷின் உடன் அருண் கீழே விழுந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் பெரிய சிலாப்பில் சிக்கிக் கொண்ட ஏழுமலையை உயிருடன் மீட்டனர். இதில் காயமடைந்த ஏழுமலை, அருண்குமார் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுவர் சரிந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் தீயணைப்புத் துறையினர் மீட்டனர் பழைய வீட்டை இடித்தபோது
0