புதுக்கோட்டை, மே 31: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே அணவயல் தடியமனையைச் சேர்ந்தவர் ஜயராஜ்(57). அதே பகுதியில், ஜயராஜின் சகோதரருக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துள்ளனர். அப்போது, சுவர் பெயர்ந்து ஜயராஜ் மீது விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த ஜயராஜை மீட்டு வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.