நாகப்பட்டினம்,ஆக.14: திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரிய உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ரூ.25 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.