மதுரை, ஜூன் 10: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நாகவாரா கிளர்மண்ட் பகுதியை சேர்ந்தவர் பாலக்கா பானர்ஜி (60). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். இவரது மனைவி மற்றும் மகன் தேவஜோதி பானர்ஜி ஆகியோருடன் மதுரைக்கு சுற்றுலா வந்தார். அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மூவரும் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர்.
ஆனால் அரசு மருத்துவமனை செல்லும் வரும் வழியிலேயேே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.