Saturday, June 22, 2024
Home » சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் சர்க்கீயூட் பஸ்களை 31ம் தேதி வரை இயக்க முடிவு

சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் சர்க்கீயூட் பஸ்களை 31ம் தேதி வரை இயக்க முடிவு

by Ranjith

 

ஊட்டி,மே28:ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளதால், இம்மாதம் இறுதி வரை சர்க்கீயூட் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டள்ளது. கோடை சீசனில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்வதால், கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இயக்கப்படும் இந்த பஸ்கள் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, நடுத்தர மக்கள் இந்த சர்க்கீயூட் பஸ்களில் சென்று அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் மலர் கண்காட்சி நடந்த மூன்று நாட்களில் மட்டும் தினமும் 40 பஸ்கள் வரை போக்குவரத்து கழகம் இயக்கியது. தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து சற்று குறைந்துள்ள நிலையில், தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனினும், தற்போதும் 15க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டி வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் சர்க்கீயூட் பஸ்களில் பயணிக்க விருப்பம் தெரிவிக்கும் நிலையில்,இம்மாதம் 31ம் தேதி வரை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பள்ளிகள் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி திறக்கப்படும் நிலையில்,தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறக்கும் வரையும் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தற்போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சர்க்கீயூட் பஸ்களில் நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi