புதுச்சேரி, ஜூன் 12: புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மதியம் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா ரோடு வேளாண் அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில் பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், திண்டுக்கல் மாவட்டம் பழனி புது ஆயக்குடி பகுதியை சேர்ந்த வாசிம்ராஜா (21) என தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது
0