தொண்டி,ஆக.23: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரதீப் பிஸ்வாஸ். இவரது மனைவி சங்கீதா. தனியார் வங்கியில் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இவர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக அசாமை சேர்ந்த அமித்சங்கம் பழக்கமாகியுள்ளார். இவர்கள் மூவரும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் சைக்கிள் பயணத்தை தொடங்கி, தற்போது நாடு முழுவதும் வலம் வருகின்றனர். நேற்று ராமேஸ்வரம் சென்று விட்டு வேதாரண்யம் செல்வதற்காக தொண்டி வழியாக வந்தபோது பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.