சுரண்டை, நவ.16: சுரண்டை நகராட்சி பகுதியில் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் புகைப்படம், முகவரி திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது. சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (16ம்தேதி) சனிக்கிழமை, நாளை(17ம்தேதி) ஞாயிற்றுக்கிழமையும், அடுத்த வாரம் 23 மற்றும் 24ம்தேதி ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1.1.2025 அன்று வரை 18 வயது பூர்த்தியவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். மேலும் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.
சுரண்டை நகராட்சியில் வாக்காளர் சேர்க்கை முகாம்
0
previous post