சுரண்டை,ஆக.29: சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்த்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூர் சாலையில் நேற்று அதிகாலை லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் மூன்று பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைத்தனர். இவர்கள் அனைவரும் மிகவும் வறுமையில் உள்ள கூலித்தொழிலாளர்கள். எனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கருணை உள்ளத்தோடு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.