வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம் சுக்காவழி, கருஞ்சீன்னூர், திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான குமரம்பட்டி, புதுவாடி, போன்ற ஊர்களுக்கு பொட்டிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாத வழியாக தான் செல்ல வேண்டும்.ஆனால் மழைக்காலத்தில் மழைநீர் மற்றும் ஊற்றுநீர் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதை பாசனம் பிடித்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் சுரங்க பாதையை அப்பகுதிமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்….