திருப்பூர்,மே27: திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருப்பூர் வளர்மதி அருகே சுரங்க பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.சுரங்க பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தை சுற்றிலும் விபத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் தகர தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றின் ஒரு பகுதியில் தடுப்புகள் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சேதம் அடைந்த தடுப்புகளை நேற்று பார்வையிட்டு சீரமைத்துள்ளனர். மேலும் தகர சீட்டுகளைக் கொண்டு தடுப்புகள் அமைத்து விபத்துக்கள் ஏற்படாத வகையில் டிவைடர்கள் அமைத்துள்ளனர்.