Friday, June 21, 2024
Home » சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அரசூரில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அரசூரில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

by Karthik Yash

திருவெண்ணெய்நல்லூர், மே 18: திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கூட்ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி நேற்று கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் விழுப்புரம் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கூட்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இதனால் அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பாரதி நகரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பொறியாளர் சுரங்கப்பாதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அரசூரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். ஆனால், பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே நேற்று காலை அரசூரில் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் வாகனங்களில் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியர் பழனியிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக அரசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi