விருதுநகர், ஆக.22: விருதுநகர் பெண்கள் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நககர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட கல்லூரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் தின்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை காட்சிக்கு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி முதல்வர் சிந்தனா, வணிக மேலாண்மை நிர்வாகவியல் துறை தலைவர் சுகந்தி, பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.