Wednesday, May 31, 2023
Home » சுயதொழிலே உயர்வு தரும்!

சுயதொழிலே உயர்வு தரும்!

by kannappan

என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ?என் மகனுக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவர் இதுநாள் வரை ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். மாற்று தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா? பெற்றோராகிய எங்களையும் அவர்தான் கவனிக்க வேண்டும். குடும்பத்திற்கேற்ற வருமானம் வரும் வகையிலான தொழிலாக அமையுமா?-  ராஜேந்திரன், சென்னை.உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்து பார்த்ததில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சந்திரனின் அமர்வினைக் காண முடிகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி புதன் 12ல் சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுவதால் குறைந்த வருமானத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தியின் காலம் முடிவுறும் தருவாயில் உள்ளது. 12.12.2020 முதல் துவங்க உள்ள சூரிய புக்தியின் காலத்தில் அதிக அலைச்சலுக்கு ஆளாவார். வண்டி வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அடுத்த வருடத்தின் பிற்பாதியில் ஆளாவார். 05.11.2021 முதல் சுயதொழில் என்பது அமையும். பத்தாம் பாவகத்தில் சந்திரன் தனது சுயசாரம் பெற்று தனித்து அமர்ந்திருப்பதால் சந்திரன் சார்ந்த தொழில் அமையும். குடி தண்ணீர் கேன் விநியோகம், தண்ணீர் சார்ந்த தொழில்கள், ஜூஸ் கடை, காய்கறி, பழங்கள் வியாபாரம், உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், இனிப்பு பலகார கடை, அரிசி வியாபாரம் போன்ற தொழில்கள் இவருக்கு கை கொடுக்கும். தகப்பனாராகிய நீங்கள் அவருடைய தொழிலுக்கு உங்களால் இயன்ற உடல் ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டியிருக்கும். உங்கள் மகன் உழைப்பதற்குத் தயாராக இருக்கிறார். கடுமையாக உழைக்கவும் செய்கிறார். ஆனால், அவரது உழைப்பு அடுத்தவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையான உழைப்பிற்கான பலனை அவர் அனுபவிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கான காலமும் நேரமும் வரும் வருடத்தின் இறுதியில் கூடி வருகிறது. உங்களது ஆலோசனையும் அவருக்கு பயன்தரும் வகையில் அமையும். ? இன்னும் இரண்டரை ஆண்டுகளில் துவங்க உள்ள குரு தசை முதல் வாழ்க்கை ஏறுமுகமாக செல்லும் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது.?என் மகன் இந்திய குடிமைப்பணி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்று அவருக்கு வேலை கிடைக்குமா?- வியாசர்பாடி வாசகி.பள்ளிப்படிப்பு முதலாகவே கடுமையாக உழைத்து வரும் உங்கள் மகனுக்கு நிச்சயமாக அதற்குரிய பலன் கிடைக்கும். ஒரு லட்சியத்தோடு இரவு பகலாக உழைத்து வரும் அவர் உயர்ந்த பதவியை கண்டிப்பாக அலங்கரிப்பார். அவருடைய ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிதம் செய்து பார்த்ததில் அரசயோகம் என்பது வலிமையாக உள்ளதைக் காண முடிகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசியைக் கொண்டிருக்கும் அவர் லக்னசந்தி என்றழைக்கப்படுகின்ற நேரத்தில் பிறந்துள்ளார். இரண்டு லக்னங்களின் சந்திப்பில் அவர் பிறந்திருப்பதால் சிறுவயது முதலே எல்லா விஷயங்களிலும் சற்று சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காமல் பி.டி.எஸ். படிப்பினை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார். பி.டி.எஸ் படிப்பினை திறம்பட முடித்து பல் மருத்துவராக பணியாற்றியும் அதிலும் தடை என்பது வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது தன் முயற்சியின் பேரில் குடிமைப் பணிக்காக உழைத்து வரும் அவர் முதலில் தடைகளை சந்தித்திருந்தாலும் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவார். மேஷ லக்னம், ரிஷப லக்னம் என்ற இரண்டு லக்னங்களின் சந்திப்பின் போது அவர் பிறந்திருக்கிறார். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் ரிஷப லக்னம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களது கணிதத்தின்படி மேஷ லக்னத்தின் இறுதியில் அவர் பிறந்திருக்கிறார் என்று வருகிறது. குடிமைப் பணியின் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளார் என்பதாலும் ஜீவன ஸ்தானத்தில் சூரியனின் அமர்வினை உண்டாகும் என்பதைக் கொண்டும் அவர் மேஷ லக்னத்தில் பிறந்தவர் என்ற தீர்மானத்திற்கு வந்து பலன்களைத் தந்துள்ளோம். பஞ்சாங்க கணிதத்தின்படி தற்போது அவருக்கு சுக்கிரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. சனி புக்தியின் துவக்கத்தில் ஒரு சில தடைகளைக் கண்டாலும் தற்போது அவர் தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில் நடக்கும் அந்தரம் என்பது சாதகமாக உள்ளதால் நிச்சயமாக அவரால் குடிமைப் பணிக்கான தேர்வினில் வெற்றி காண இயலும். உங்கள் மகன் மிகவும் பக்தி உள்ளம் கொண்டவர் என்றும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுபவர் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த பக்தியும் அவரது உழைப்புமே போதுமானது. தற்போது நடைபெற உள்ள குருபெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி ஆகிய இரண்டுமே அவரது ராசிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதாகவும் அமைந்துள்ளது. விடா முயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் தேர்வினை எதிர்கொள்ளச் சொல்லுங்கள். நிச்சயமாக இந்த முறை அவர் தேர்வினில் வெற்றி பெற்று உயர் பதவியை அடைவார் என்பதையே அவரது ஜாதகக் கணிதம் சொல்கிறது.?74 வயதாகும் என் தாயாருக்கு அவ்வப்போது உடல்நிலையில் சிரமம் உண்டாகி வருகிறது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அவர் சில காலமாக முடங்கிக் கிடப்பதைக் காணும்போது மனதிற்கு வருத்தமாக உள்ளது. இறுதிக் காலத்தில் சொந்த ஊருக்குச் சென்று வசிக்க விரும்புகிறார். தனியாக அனுப்பலாமா? அவரது ஜாதகப்படி கண்டம் ஏதேனும் உண்டா? ஆயுள் பாவம் எப்படி உள்ளது?- மைதிலி, பெங்களூரு.நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கில தேதியுடன் தமிழ் வருடம், மாதம், தேதி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கையில் இரண்டும் வெவ்வேறாக உள்ளது தெரியவருகிறது. இவ்வாறு தமிழ் வருடம், மாதம், தேதி ஆகியவற்றை வைத்து கணித்துப் பார்த்ததில் ஆங்கில வருடத்தினையும் மாதத்தினையும் தவறாக எழுதியுள்ளது தெரியவருகிறது. அவரது ஜாதக பலத்தின்படி தற்காலம் புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சார நிலைப்படி தற்போது அவர் நரம்புத் தளர்ச்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அவரது ஜாதகத்தின்படியும், வயது முதிர்வின் காரணமாகவும் இந்த பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தற்போது பார்த்து வரும் வைத்தியத்தை தொடர்ந்து தவறாமல் கடைபிடித்து வாருங்கள். அவர் தனது அந்திம காலத்தை சொந்த ஊரில் கழிக்க விரும்புவதாக எழுதியுள்ளீர்கள். அவருடைய ஜாதகம் சொல்லும் கிரக அமைப்பின்படி இனிமேல் அவர் தனியாக வசிப்பது என்பது அத்தனை உசிதமில்லை. எனவே அவரை சொந்த ஊருக்கு தனியாக அனுப்ப வேண்டாம். அவருடைய ஆயுள் பாவத்தைப் பற்றிக் கேட்டுள்ளீர்கள். தற்போது உடனடியாக எந்தபயமும் இல்லை என்றாலும் வருகின்ற 10.08.2021 முதல் 20.12.2021 வரையில் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கண்டத்தை தாண்டிவிட்டால் அதன் பின் பூரண ஆயுள் என்பது உண்டு. மனிதனின் ஆயுளை தீர்மானிக்கும் சக்தி பகவானைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது என்பதால் பெருமாளிடம் உங்களது பிரார்த்தனையை முன்வையுங்கள். பகவானின் திருவருளால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். என்ன சொல்கிறது, என் ஜாதகம்?ஆன்மிகம், தபால் பை எண். 2908,மயிலாப்பூர், சென்னை – 600 004சுபஸ்ரீ சங்கரன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi