ராஜபாளையம், அக்.20: ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மகளிர் மத்தியில் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைத்து விட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு அனைவரும், கிடைத்துவிட்டது என ஒருமித்த குரலில் மகிழ்ச்சியுடன் கூறினர்.
அதனைத்தொடர்ந்து சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டி சிறப்பாக உள்ளது எனவும், அதுபோல் ராஜபாளையம் தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ், லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.