கந்தர்வகோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் அரசு பொதுவுடமை ஆக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நான்கு ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, வியாபார கணக்கு, நிரத்திர வைப்புதொகை, நகை கடன், விவசாய கடன், மகளிர் சுயஉதவி கடன் போன்ற வரவு, செலவு செய்து வருகின்றனர். இந்த வங்கிக்கு தினசரி இருநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கவும், செலுத்தவும் சிரமமடைகின்றனர். எனவே, பணத்தை டெப்பாசிட் செய்யவும், எடுக்கவும் ஏடிஎம் மெஷின் வைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுந்தம்பட்டி அரசு வங்கியில் ஏடிஎம் இயந்திரம் அமைக்க கோரிக்கை
0