தேன்கனிக்கோட்டை, ஆக.15: தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சி ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மரிசாமி கவுடா(103 வயது). இவர் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் 40 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராகவும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பரான இவர், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். வயது முதிர்வு காரணமாக, நேற்று முன்தினம் இரவு மரிசாமி கவுடா உயிரிழந்தார். அவரது உடலுக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, பேரூராட்சி தலைவர் சீனிவாசன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் சீதர் ஆகியோர், மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி காலமானார்
previous post