சிவகங்கை, ஆக. 7: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.15 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி பிரவீன்உமேஷ்டோங்கரே முன்னிலை வகித்தார்.
மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) முத்துக்கழுவன், ஆர்டிஓக்கள் பால்துரை, விஜயகுமார் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.