திருவாரூர், ஆக. 15: திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மக்கள் கூடும் பொது இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாட்டின் 77வதுசுதந் திரதினம் இன்று கொண்டாடப்பட உள்ளத்தை யொட்டி ரயில் நிலையங்கள்,விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுப ட்டு வருகின்றனர்.அதன்படி திருவாரூர் மாவட்ட த்தில் மாவட்ட எஸ.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சுதந்திர தின விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில் வளா கங்கள், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உட்பட பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் கொண்டும், மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் போலீசார் சோதனை
previous post