புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு சுதந்திர தினத்தைமுன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) இன்று (ஆக.15ம் தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு, அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யகூடாது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.