விருதுநகர், ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே இருப்பு பாதை மற்றும் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை நடைபெற்றது. நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சுதந்திர தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை செய்து வருகின்றனர்.
விருதுநகரில், விருதுநகர் -தூத்துக்குடி ரயில்வே இருப்பு பாதையில் கௌசிகா மகாநதி பாலம் பகுதி, ரயிலில் செல்லும் பயணிகளின் உடைமைகள், ரயில் நிலைய வாகன காப்பகம், ரயில்வே பார்சல் ஆபீஸ் மற்றும் விருதுநகர் வழியாக செல்கின்ற ரயில்கள் மற்றும் தண்டவாளங்களில் ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் எஸ்.எஸ்.ஐ. சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.