திருப்பூர், ஆக.14: திருப்பூர் மாநகரில் சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரில் மத்திய அரசு அலுவலகம், சோதனைச்சாவடிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் கொண்டு வரும் பைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனைகளுக்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர். இந்த சோதனை இப்பணியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுதந்திர தினம் நிகழ்வு முடியும் வரைக்கும் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.