அரியலூர், ஆக 17: அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மழலை சிறுமி சுதிக்சா. ரூ.1,000 கட்டணம் செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டார். மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினார், நூலகர் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் எழுத்தாளர் ஷோபனா பன்னீர்செல்வத்துக்கு பட்டயத்தை வழங்கினார்.
விழாவில், பொறியாளர் பல்லவன், எழுத்தாளர் சுந்தரி, மழலைச் சிறுமி சுதிக்சா ஆகியோர் தலா ரூ.1000 கட்டணம் செலுத்திக் கொண்டு புதிய புரவலாக இணைத்துக் கொண்டனர்.மேலும் இவ்விழாவில் ஆனந்த் செஸ் அகதெமி நிறுவனர் ஆனந்த் கலந்து கொண்டு போட்டித் தேர்வுக்கான நூல்களை வழங்கினார். இலுப்பைக்குடி உரக்கடை உரிமையாளர் வரதராஜன், வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்கரசி கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் நூலகர் செசிராபூ நன்றி கூறினார்.