நாகர்கோவில், செப்.4: சுசீந்திரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்ட பிள்ளை (85). இவர் சுசீந்திரத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் இரவு காவலாளியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், இவர் சுசீந்திரம் புறவழிச்சாலை பகுதியில் கற்காடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், மார்த்தாண்ட பிள்ளை மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி, கார் டிரைவர் பெரியகாடு பகுதியை சேர்ந்த எம்லின் தியோ எர்னேஸ் (29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த மார்த்தாண்ட பிள்ளை, நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.