பல்லடம், ஆக.30: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி, கே.அய்யம்பாளையம் ஊராட்சிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கே.என்.புரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வக்கீல் எஸ்.குமார் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கே.அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், பல்லடம் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளருமான கலைவாணி சசிகுமார், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஊராட்சி துணைத்தலைவர் மருதாச்சலமூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், ஒன்றிய அவைத்தலைவர் சாமிநாதன், துணைச்செயலாளர் ஆட்டோ குமார், சசிகுமார், மாவட்ட பிரதிநிதி துரைமுருகன் தகவல் தொழில்நுட்ப அணி பாலகுமார், பல்லடம் வட்டார காங்கிரஸ் தலைவர் புண்ணியமூர்த்தி, கழக நிர்வாகிகள் பழனிசாமி, சுரேஷ், கராத்தே காளியப்பன், வேலுசாமி ஆனந்த், பாலன், வெள்ளிங்கிரி, ஈசன் பரமசிவம், வரதராஜ், ஸ்ரீதர்,சபிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.