களக்காடு, அக்.5: மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான சேவை தொடர்பான நிகழ்ச்சியில் பேருந்து நிறுத்தம், அரசு மேல்நிலைப்பள்ளியில், சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி, மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ரோட்டரி பப்ளிக் சர்வீஸ் நபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.