திருவாரூர், நவ. 19: திருவாரூர் மாவட்ட சுகாதார துறையில் இருந்து வரும் 3 தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்குமாறு துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள வட்டார கணக்கு உதவியாளர் பணியிடம்- ஒன்றும் மற்றும் புள்ளி விவர பதிவாளர் பணியிடம்- 2 என மொத்தம் 3 தற்காலிக ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும். மேலும் இந்த பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு www.thiruvarur.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நலவாழ்வு சங்க செயற்செயலாளர் மற்றும் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளார்.