சிவகங்கை, பிப். 15: சிவகங்கையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாகவுள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை தற்போது தொகுப்பூதியத்தில் எம்டிஎம் திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக நிரப்ப வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் நிலை 2 பணியிடங்களை 2715 ஆக நிர்ணயிக்க கோரி சுகாதாரததுரை இயக்குநர் அனுப்பிய கோப்பிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முகமதுவகாப் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்தோசம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மண்டல செயலாளர் பூமிராஜன் மற்றும் நிர்வாகிகள் ஹபிபுல்ரகுமான், ஜெரால்டு, சதீஷ், சாத்தான், கோபிநாத் பேசினர். பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப்பேசினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.