சீர்காழி,ஆக.29: சீர்காழி மின்சார வாரிய உதவி செயற்பெறியார் விஸ்வநாதன் ஒரு அறிக்கையில், சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் உள்ள வெள்ளமணல் மற்றும் மகேந்திரப்பள்ளி உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே இன்று (29ம் தேதி) ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், நல்லூர், நாணல் படுகை, வெள்ளமணல், மகேந்திரபள்ளி, காட்டூர், கோதண்டபுரம், அளக்குடி, முதலைமேடு, முதலைமேடு திட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
இதேபோல் எடமணல் துணை மின் நிலையத்தில் இன்று (29ம்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் எடமணல், வழுதலைக்குடி, ராதாநல்லூர், திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, ஆமப்பள்ளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.