சீர்காழி, செப்.20: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில், வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் ஆணையர் ஹேமலதா தலைமையில் நடந்தது. நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் முபாரக் அலி வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதி மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குப்பைகள் தேக்கமின்றி அகற்ற வேண்டும், கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.