சீர்காழி,செப்.4: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாசில்தாராக பணிபுரிந்து வந்த இளங்கோவன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையில் தனி தாசில்தாராக பணி புரிந்து வந்த அருள் ஜோதி சீர்காழி தாசில்தாராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற தாசில்தாருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பாராட்டி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.