சீர்காழி, ஜூன் 10: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோட்டாட்சியர் சுரேஷ் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட துணை வட்டாட்சியர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.