சீர்காழி, மே 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வந்த சிறப்பு எஸ்எஸ்ஐ பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி அன்று நண்டலார் சோதனை சாவடியில் பணியில் இருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் பாலசுந்தரத்துடன் 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து, உயிரிழந்த பாலசுந்தரம் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர்.
இதற்காக வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்தீ ஸ்வரன் கோயில் எஸ்ஐ சுரேஷ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உதவி ஆய்வாளர் காமராஜ், மாவட்ட தலைவர் சிறப்பு எஸ்எஸ்ஐ கண்ணன் முன்னிலையில் சக காவலர்கள், உயிரிழந்த பாலசுந்தரம் குடும்பத்திற்கு 6 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாயை நிவாரண உதவியாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.