சீர்காழி, ஆக.31: சீர்காழியில் இந்து அமைப்புகள் சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சட்டைநாதர் சுவாமி ஆலயத்தில் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சீர்காழி நகர் பகுதியில் 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும், செப்டம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் விழாவை சிறப்பாக நடத்துவது, விழாவுக்கு ஆதீன கர்த்தர்களை அழைப்பது, அனைத்து விநாயகரும் விசர்ஜன நாளான 19ம் தேதி பழைய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணி அளவில் ஒருங்கிணைத்து உப்பனாற்றில் கரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சண்முகம், விழாக் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், இந்து முன்னணி நகர தலைவர் நாகமுத்து, விழா நிர்வாகிகள் கண்ணதாசன், சம்பத், ரவி, ஹரி ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.