சீர்காழி, ஜூலை 16: சீர்காழியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் வெற்றி பெற பேசு என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் ராஜ்கமல் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என 11 பள்ளிகளைச் சேர்ந்த 276 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மேடைகளில் எவ்வாறு பேசுதல், பார்வையாளர்களை கவரும் வகையில் பேசுதல் குறித்து 15 சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். மேடைப்பேச்சியில் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி தலைவர் இன்பராஜ் செயலாளர் பாலாஜி, திட்ட இயக்குநர் தமிழ் வாணன், முன்னாள் மண்டலத் தலைவர் கதிர். உடற்கல்வி இயக்குநர் சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.