சீர்காழி, மே 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் ஈசானி தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை சாலை வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சென்று வருகின்றனர். அப்பொழுது சிலர் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடு ரோட்டில் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவம் உள்ளது. அந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.
எனவே குறிப்பி்ட அந்த கடைையை அகற்றக் கோரி டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற முன்வரவில்லை. ஆகவே பொது மக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்கள், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.