சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். மேலும் இக்கோயில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சிவன், பார்வதி அம்பாள் தோன்றி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய புகழ் பெற்ற ஸ்தலமாகும். இத்தகையை கோயிலில் நடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் தற்போது வெகு மகிழ்ச்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டைநாதர் சுவாமி கோயிலின் தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது புதிதாக வாகனங்கள் வாங்குவோர் கோயிலுக்கு எடுத்து வந்து படையல் இட்டு செல்வது காலம் தொட்டு இருந்து வருகிறது.