சீர்காழி, ஜூலை 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிப்பவர்கள் கஸ்தூரி, தயாநிதி இவர்களது வீட்டில் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது/ இதனால் உடமைகளை இழந்து தவித்து வந்த இரு குடும்பத்தினரை தமிழ்ச்சங்க தலைவர் பொறியாளர் மார்க்கோனி சந்தித்து ஆறுதல் கூறி
ரூ. 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொறியாளர் மார்கோனிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமா மணி, ராஜேஷ் மற்றும் லட்சுமி டிரைவிங் ஸ்கூல் வீரபாண்டியன், ராஜசேகர், வெற்றிலை முருகன், மலையப்பன், செந்தில், பாபு, கேபிள் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.