சீர்காழி,ஆக.20: தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணஅரசு இயந்திரம் களத்திற்கு வரும். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமானது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால் சீர்காழி வட்ட அளவில் நாளை (21ம்தேதி) காலை 9 மணி முதல் நாளை மறுநாள் (22ம்தேதி) காலை 9 மணி வரையிலும், சீர்காழி வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்ட உள்ளனர். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்திட உள்ளதால் சீர்காழி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவித்து தமிழ்நாடு அரசின் இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தெரிவித்துள்ளார்.