சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கோகுலாஷ்டமி முன்னிட்டு ஜெயின் சங்கம் விஜய் சுபம் சிட் பண்ட் நிறுவனம், , மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் நடைபெற்றது. ஜெயின் சங்கம் தலைவர் கியான் சந்த் தலைமை வகித்தார். ஜெயின் சங்க நிர்வாகி ஹரக்சந்த், சுபம் வித்யா மந்திர் -பள்ளித் தாளாளர் சுதேஷ் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட பிரச் னைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் 700க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அறுவை சிகிச்சைக்காக 138 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை ஜெயின் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.