பெரம்பலூர், ஏப்.19: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பெரிய ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றி ஏரியினை மீட்டெடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பெ ரிய ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைக ளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (18ம்தேதி) நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப் பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் மற் றும் 5 ஆறுகளும் உள்ளன.
மருதையாறு வடிநில உப கோட்டம் (பெரம்பலூர்) கட் டுப்பாட்டில் உள்ள துறைம ங்கலம் பெரிய ஏரி 120 ஏக் கர் நீர்தேக்கப் பரப்பளவு கொண்டது. இதில் 17.22 மில்லியன் கனஅடி நீர் தே க்கும் திறன் கொண்டது. இதன்மூலம் 273 ஏக்கர் வி வசாய நிலங்கள் பயனடை யும். துறைமங்கலம் பெரிய ஏரியில் உள்ள சீமைக் கரு வேலமரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றை அகற்றி, சுற் றியுள்ள கரைப்பகுதிகளை பலப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை அலுவலர்க ளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
ஏரியைச் சுற்றி சாலை அமைத்து, பொதுமக்கள் அன்றாடம் நடைப்பயிற்சிக்கு பயன்ப டுத்தும் வகையில், இருபுற மும் மின் விளக்குகளை அமைத்து நடைபாதையாக மாற்றுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ள நக ராட்சி ஆணையருக்கு உத் தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் (பொ) ராதா, பெரம்பலூர் தாசில் தார் கிருஷ்ணராஜ், மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயி உடனிருந்தனர்.