ஆர்எஸ்.மங்கலம், ஆக. 19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கோட்டைகரை ஆற்றில் உள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்றிவிட்டு தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சிய பகுதியான ஆர்எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள கோட்டைகரை ஆறு சுமார் 30 கி.மீ தூரத்திற்கும் அதிகமான நீளம் கொண்டது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர், கண்மாய் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கோட்டைகரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு செல்கிறது.
இந்த ஆற்றின் பெரும்பாலான உட்பகுதி முழுவதும் காட்டு கருவேல மரங்களாக நிறைந்து காடு போல் காட்சியளிக்கின்றது. எனவேல கோட்டைகரை ஆற்றில் உள்ள முட்புதர்களை அகற்றி, ஆற்றை தூர்வாரி மழைநீர் தேக்குவதற்காக தடுப்பணை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.