சீனாவில் வசந்தகால திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக நாடு முழுவதும் பரவலாக விளையாட்டு போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹாப்பி மாகாணத்தில் உள்ள தன்சன் நகரில் பனிசறுக்கு விளையாட்டும், பாரமப்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வசந்த கால திருவிழாவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், கிராம புறங்களிலும் வர்த்தகம் அதிகளவில் நடைபெற்றதாகவும் அரசு தெரிவித்துள்ளது.