கிருஷ்ணகிரி, ஏப்.25: கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீரஆஞ்சநேய சமேத ராகவேந்திர சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன கோயிலில், ராம நவமி விழா கடந்த 17ம்தேதி தொடங்கியது. விழாவையொட்டி, பாலாஜி சர்மாவின் சொற்பொழிவு, சென்னை லஷ்மிபதி ராஜாவின் சொற்பொழிவு, ஆனந்த தீர்த்த பஜனா மண்டலியினர் உஞ்சவிருத்தி, 22ம்தேதி மாலை தீர்த்த பஜனா மண்டலியினர் பஜனை நடந்தது. நேற்று முன்தினம் சத்யநாராயண சுவாமி பூஜை, தொடர்ந்து சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சீதாராமர் திருக்கல்யாணம்
43
previous post