Sunday, March 3, 2024
Home » சி.வி.சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்குகள் ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்குகள் ஒத்திவைப்பு

by Karthik Yash

விழுப்புரம், ஜன. 19: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி மீதான அவதூறு வழக்குகள் விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம், ஆரோவில், கோட்டகுப்பம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம், பொது கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் எம்பி தமிழக அரசையும், முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே 4 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்பி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சீனிவாசன், ராதிகா செந்தில் உள்ளிட்டவர்கள் அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து அதன் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை விசாரணையை தொடங்க கூடாது என்று தெரிவித்து வாதிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா வரும் 29ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

one + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi