சாத்தூர், ஜூலை 22: சாத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவு நாள் சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரன், சாத்தூர் நகர கமிட்டி தலைவர் அய்யப்பன், கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பையா, சாத்தூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கும்கி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவாஜி கணேசன் படத்திற்கு நகர்மன்ற தலைவர் வேலுச்சாமி, சிவாஜி மன்ற செயலாளர் சிந்தியப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர் சேதுராமலிங்கம், வட்டார துணைத்தலைவர் முத்துவேல், சத்திரப்பட்டி லட்சுமணன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.