Saturday, April 20, 2024
Home » சிவன் கோயில்களில் விடிய, விடிய பூஜை

சிவன் கோயில்களில் விடிய, விடிய பூஜை

by Karthik Yash

காரிமங்கலம், மார்ச் 9: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில் மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல், பெரியாம்பட்டி பாலாடை அம்மன் பசுபதீஸ்வரர் கோயில், அனுமந்தபுரம் சிவன் கோயில் உட்பட பல்வேறு சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இரவில் அங்காளம்மன் பிறப்பு நாடகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

15 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi