மொடக்குறிச்சி, ஆக. 17: சிவகிரி பேரூராட்சியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் உள்ள எல்பிஎஸ் தெரு, 3வது வார்டில் உள்ள தலையநல்லூர், சிலோன் காலனி ஆகிய பகுதிகளுக்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் தலைமை தாங்கினார். ஈரோடு எம்பி. பிரகாஷ் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவர் கோபால், திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் மற்றும் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.