சிவகிரி,மே 21: சிவகிரி அருகே மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் செந்தில்குமார், சைலேஷ் உள்ளிட்டோர் சிவகிரி அருகே ராமசாமிபுரம் நடுவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனையிட்டனர். அப்போது பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தேவிபட்டணத்தை சேர்ந்த கருப்பையா மகன் தொக்கன் (எ) பேச்சியப்பன் (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 27 மதுபாட்டில்கள், ரூ.1350 ரொக்கம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகிரி அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
62
previous post